Monday 17 December 2012

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வினோதினிக்கு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில மாநாட்டில் பிரதி நிதிகள் சார்பில் ரூ.60 ஆயி ரத்து 250 மருத்துவ நிதி யுதவி அளித்தனர்.


ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் வினோதினிக்கு ரூ.60 ஆயிரம் நிதி உதவி


சமீபத்தில் புதுச்சேரி காரைக்காலில் வினோதினி என்ற இளம் பெண் ஆசிட் வீச்சில் உருக்குலைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ உதவிக் காக அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில மாநாட்டில் பிரதி நிதிகள் சார்பில் ரூ.60 ஆயி ரத்து 250 மருத்துவ நிதி யுதவி அளித்தனர்.கோவையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் 14-வது மாநில மாநாடு நடந்து வருகிறது. ஞாயிறு அன்று இம்மாநாட்டை பி.சுகந்தி வாழ்த்தி பேசி னார். அப்போது அவர் அழ கான இளம் பெண் வினோ தினி காதலை ஏற்றுக் கொள் ளவில்லை என்பதற்காக கொடூரமாக ஆசிட் வீசப் பட்டு உருக்குலைந்து விட் டார். அவரது தந்தை சாதா ரண கட்டிட வாட்ச்மென். வினோதினிக்கு 3 முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. இதற்கு ரூ.9 லட்சம் செலவா கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மாதர் சங்கத்தின் சார் பில் புதுச்சேரி அரசிடம் மருத்துவ உதவி வேண்டி முறையிட்டோம். அந்த அரசு ரூ
.1.5 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமும் நேரில் கோரிக்கை வைத்துள்ளேம்.

முகம், காது, கண்கள், உருக் குலைந்த நிலையிலும் மன உறுதி தளராமல் போராடும் வினோதினிக்கு மாநாட்டுப் பிரதிநிதிகள் இயன்ற நிதி தாருங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.உடனே பிரதிநிதிகள் ரூ.100, ரூ.500, ரூ.1000 என தாராளமாக நிதி அளித்த னர். இவ்வாறு சேர்ந்த ரூ.60 ஆயிரத்து 250-ஐ மத்திய அமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிர மணியன், பி.சுகந்தியிடம் மேடையில் வழங்கினார். சிஐடியு மாநிலதுணைப் பொதுச் செயலாளர் ஆர். கருமலையான், மத்திய அமைப்பின் மாநிலத் தலை வர் கே.விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிதியளித்த பிரதிநிதிகளை உணர்ச்சிப் பொங்க பாராட்டினர்.மேலும் இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பு தலைவர் கே.ஓ.ஹபீப், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன், உழைக் கும் பெண் கள் ஒருங்கிணைப்பு அமைப்பாளர் மாலதி சிட்டிபாபு, அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செய லாளர் ஏ.பி. அன்பழகன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

1 comment:

  1. it is a noble and timely assistance rendered by the prestigious trade union of TANGEDCO.such activities creates high image among socity. thak u Balu/COTEE/Udumalpet

    ReplyDelete