Tuesday 22 January 2013

சிஐடியு 12வது மாநில மாநாடு பிப். 1ல் துவங்குகிறது பிப்.4 திருச்சியில் மாபெரும் தொழிலாளர் பேரணி


திருச்சிராப்பள்ளி, ஜன.20-  சிஐடியு தமிழ் மாநில 12வது மாநாடு வரும் பிப்ர வரி மாதம் 1ம்தேதி முதல் 4ம்தேதி வரை திருச்சியில் நடைபெறுகிறது. பிப்-4 அன்று மாலை கோஹினூர் தியேட்டர் அருகிலிருந்து மாபெரும் பேரணி துவங்கி உழவர் சந்தையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. மாநாட்டுப் ஏற்பாடு குறித்து வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.ராஜா ஞாயிறன்று வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிஐடியு தமிழ் மாநில மாநாட்டை திருச்சி மாநக ரில் வெற்றிகரமாக நடத்திடும் வகையில் 300 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் சிஐடியு அகில இந்திய துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான டி.கே.ரங்கராஜன், கவுரவ தலைவர் மூத்த தலை வர் ஆர்.உமாநாத், வரவேற் புக்குழு செயலாளர் சிஐடியு திருச்சி மாவட்டச் செயலா ளர் ஆர்.ராஜா, பொருளா ளர் எஸ்.ரெங்கராஜன் ஆகி யோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணிகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. 700க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள எல்.கே.எஸ் மகாலில் மாநாட்டை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாட்டு பணிகளில் அனைவரையும் உற்சாகப் படுத்திடும் வகையில் சிஐடியுவின் அகில இந்திய, மாநிலத் தலைவர்கள் பங்கேற்கும் பேரவைக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டு செய்திகளை மக்கள் மத்தியில் விளம்பரப் படுத்திடும் வகையில் மாநகரம் முழுவதும் சுமார் 500 இடங்கள் பல்வேறு மாவ டத்தின் இதர பகுதிகளில் சுமார் 500 இடங்கள் என 1,000 க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்கள் பல்வேறு வண்ணங்களில் எழுதப்பட்டுள்ளன. திருச்சி மாநகரத்தில் அனைத்து கிளை சங்கங்கள் மூலம் 250க்கும் மேற்பட்ட பிளக்ஸ் தட்டிகள் முக்கியமான இடங்களில் வைக்கப்பட உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்களில் மாநாட்டை விளம்பரப்படுத்திடும் பிளக்ஸ் பேனர்கள் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் டி.கே.ரங் கராஜன், மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தர்ராசன் மற்றும் சிஐடியுவின் மாநில தலைவர்கள் கலந்து கொள்ளும் பேரவைக் கூட்டங்கள், ஆலைவாயிற் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு கடலூரிலிருந்து மாநாட்டில் ஏற்றி வைக்கப்படும் கொடி, கோவை மற்றும் திருச்சி பொன்மலையிலிருந்து தியாகிகள் நினைவு ஜோதிகள் கொண்டு வரப்பட உள்ளன.
செந்தொண்டர்கள் மாநாட்டு பணிகளுக்காகவும் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற உள்ள பேரணி பொதுக் கூட்டத்தில் அணிவகுக்கும் வகையிலும் சிஐடியு தொழிற்சங்கத்தில் பணியாற்றும் சங்க உறுப்பினர்களில் 500 க்கும் மேற்பட்டவர்கள் செந்தொண்டர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் உத்வேகத்துடன் நடைபெற்று வருகின்றன.12வது மாநாட்டை குறிக்கும் வகையில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் 12 சிஐடியு கொடிகள் ஏற்றிட தீர்மானிக்கப்பட்டு முதல் கட்டமாக ஜன-19 அன்று திருச்சி மாநகரில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் 12 சிஐடியு கொடிகள் ஏற்றப் பட்டுள்ளன.
மேற்படி நிகழ்ச்சியில் மாநில துணை பொதுசெயலாளர் ஜி.சுகுமாறன் கொடிகளை ஏற்றினார். இந்நிகழ்ச்சிகளில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்ட தலைவர் ஆர்.சம்பத், சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.அன்பழகன் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
சீத்தராம் யெச்சூரி பிப்-4 அன்று மாலை கோஹினூர் தியேட்டர் அருகிலிருந்து மாபெரும் பேரணி செந்தொண்டர் அணிவகுப்புடன் துவங்கி உழவர் சந்தையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, சிஐடியு அகில இந்திய தலைவர் ஏ.கே.பத்மநாபன், அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் எம்.பி. அகில இந்திய துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டத்தில் உழைக்கும் மக்கள் கலை இரவு நிகழ்ச்சிகளாக பல்வேறு கலைக்குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

No comments:

Post a Comment