Friday 16 August 2013

புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக. 23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக் கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய - மாநில
அரசு ஊழியர், ஆசிரியர்வங்கிஇன்சூரன்ஸ்தொலைதொடர்புஅரசு போக்குவரத்துமின்சாரம்,ரயில்வே அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:
மத்திய அரசு ஓய்வூதியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாக பென்ஷன் நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூலம் புதிய பென்ஷன் திட் டத்தை கொண்டு வந்துள்ளது. இம்மசோ தாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொட ரில் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிக் கும் நடவடிக்கையை இக்கூட்டம் வன் மையாகக் கண்டிக்கிறது.

இந்த புதிய பென்ஷன் திட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் மத்திய - மாநில அரசு ஊழியர்,அரசு சார்ந்த நிதி மற்றும் பொது நிறுவனங்களில் பணிபுரியும் லட் சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படு வார்கள்.புதிய பென்ஷன் திட்டம் மூலம் உரிய பென்ஷன் கிடைப்பது அரிதாகிவிடும். ஊழியர்களின் பென்ஷன் சேமிப்பு நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வதின் மூலம் பென்ஷன் சேமிப்பு நிதிக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிடும்.மத்திய அரசு புதிய பென்ஷன் திட் டத்தை முழுமையாகக் கைவிட கோரியும்,பென்ஷன் நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக்குழு சார்ப்பில் ஆக. 23 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி யளவில் சென்னை அண்ணாசாலைதாரா பூர் டவர் அருகில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பகுதி ஊழியர்களையும்தொழிலாளர் களையும்பெருமளவில் பங்கேற்க செய் வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment