Thursday 21 February 2013

தொழிற்சங்கம் ஸ்டிரைக் எதிரொலி : 8 கோடி மின் கட்டண வசூல் பாதிப்பு

சென்னை: தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் மொத்தம் 1.64 கோடி வீட்டு இணைப்புகள் உள்ளன. மின் பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்து முடித்தவுடன், அடுத்த 20 நாட்களில் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு மறு இணைப்பு தரப்படும்.  மின்கட்டண மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், இணையதளம் ஆகியவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இருப்பினும், மின்கட்டண மையங்களில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், சிஐடியு, தொமுச உள்பட 11 மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் மின்ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மின்கட்டண மையங்களில் பணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டண வசூல் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் தினமும் ரூ.20 கோடிக்கு வசூலாகும். முதல்நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் 60 சதவீத மின்கட்டண வசூல் மையங்கள் மூடி இருந்தன. இதனால், ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Wednesday 20 February 2013

ஈரோடு மண்டலத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி

 11 மத்திய தொழிற் சங்கங்கள்  நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., உள்பட 11 தொழிற்ச் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.  விலைவாசி உயர்வு , தொழிலாளர் நலச் சட்டம் மீறப்படுவதைக் கண்டித்து ஸ்ட்ரைக் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேட்டுர் மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 725 பேர்

ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 643 பேர்


கோபிமின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 
454 பேர்

சேலம் மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 604 பேர்

நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 549 பேர்


திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி

11 மத்திய தொழிற் சங்கங்கள்  நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., உள்பட 11 தொழிற்ச் சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.  விலைவாசி உயர்வு , தொழிலாளர் நலச் சட்டம் மீறப்படுவதைக் கண்டித்து ஸ்ட்ரைக் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1336 (அவற்றில் அலுவலக்பணியாளர்கள் 435+களப்பணியாளர்கள் 901) (அலுவலக பணியாளர்களில் 435 ல் அதிகாரிகள் மட்டும் 160 பேர்)

TIRUPUR DIVISION 
                                        TOTAL            PRECENT               STRIKE                 LEAVE

         PROVENCIAL             145                 77                           61                            7

         RWE                          249                 27                         209                          13


AVINASHI DIVISION
         
         PROVENCIAL             76                    54                          20                          2

         RWE                          163                  54                          103                         6


PALLADAM DIVISION  


         PROVENCIAL             78                    36                            37                        5

          RWE                         157                  10                            140                       7


KANGAYAM DIVISION

          PROVENCIAL             79                   47                            32                    

          RWE                         260                   28                           232 

SE OFFICE

         PROVENCIAL              57                    49                           2                             6               

          RWE                           21                      4                        15                             2


         TOTAL
         
         PROVENCIAL             435                    263                       152                          20


         RWE                          850                     123                       699                          28     

Tuesday 5 February 2013

வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு முடிவு

வரும் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்கேற்கிறது என்று அதன் செயலர் வா.அண்ணாமலை தெரிவித்தார். பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக
ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்டக் கிளையின் முப்பெரும் விழாவில் அவர் பேசியது: மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு அகில இந்திய அளவில் நடத்தத் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பங்கேற்கிறது.

Monday 4 February 2013

சவால்களை எதிர்கொண்டு தொழிலாளி வர்க்கம் முன்னேறும்! சிஐடியு மாநாட்டில் தபன்சென் எம்.பி. முழக்கம்


சிஐடியு மாநில மாநாட்டை நிறைவு செய்து, பிரதிநிதிகளிடையே பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி. உரையாற்றினார்.
திருச்சிராப்பள்ளி, பிப்.4-முதலாளி வர்க்கம் எத்தனை விதமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டாலும் அனைத்தையும் உடைத்தெறிந்து முன்னேறும் வல்லமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என முழங்கினார் சிஐடியு அகில இந்தியப் பொதுச்செயலாளர் தபன் சென் எம்.பி. இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு)வின் 12வது மாநில மாநாடு திருச்சியில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளான திங்கள் கிழமையன்று புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, நிறைவுரையாற்றி தபன்சென் பேசிய தாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களை வாழ்த்துகிறேன். சவால்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை நீங்கள் சரியாகவே வழி நடத்துவீர்கள் என நம்புகிறேன். சிஐடியுவின் தமிழ் மாநிலக்குழு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக புதிய புதிய பகுதிகளில் தனது போராட்ட வியூகத்தை வகுத்து வருகிறது. குறிப்பாக நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளில் நீங்கள் நிகழ்த்தியிருக்கிற தலையீடுகள் உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது. நிச்சயமாக உங்கள் அனுபவத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வோம்.
போராட்டக்களத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிற அளவிற்கு நமது சங்க உறுப்பினர்களின் எண் ணிக்கையிலும் கவனம் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் அமைப்பு ரீதியாகவும், அரசியல் நடவடிக்கைகளிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்த முடியும். தொழிலாளி களுக்கு ஏற்பட்டு இருக்கிற இந்த நெருக்கடியான காலகட் டத்தில் அவர்களுடன் இணைந்து நின்று உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். பிறகு அவர்களை ஸ்தாபனப்படுத்துவதையும் தவறவிட்டுவிடக்கூடாது. புதிய சூழலுக்கு ஏற்ற வகையில் மேலும், மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். பொதுத்துறையாக இருந் தாலும், தனியார் துறையாக இருந்தாலும் அந்த நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதை முக்கிய பணியாகக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் அமையும். திரட்டப்பட்ட தொழில்களில் உள்ள காண்ட்ராக்ட் தொழிலாளர் என்றுதான் அவர்களை பார்க்க வேண்டும். உழைக்கும் பெண்களை ஒருங்கிணைப்பதிலும் சிறப்பான, தொடர்ச்சியான கவனம் செலுத்த வேண்டும். அங்கன்வாடி உள்ளிட்ட அரசின் திட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளிலும் நாம் வலுவான தலையீடுகளைச் செய்ய வேண்டும். தொழிற்சங்க இயக்கம் தான் சமூக முன்னேற்றத்திற்கு அடிப்படை. சாதி ரீதியான அணி திரட்டலைப் பின்னுக்குத் தள்ள வேண்டுமானால், வர்க்க ரீதியான அணிதிரட்டலை பன்மடங்கு வேகப்படுத்த வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அனைத்தையும் சுக்குநூறாக உடைத்தெறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு. அந்தத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப் பாத்திரமாக சிஐடியு விளங்கும். இவ்வாறு தபன்சென் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

மலைகோட்டை மாநகரில் சங்கமித்த தொழிலாளர்கள்!


திருச்சியில் எழுச்சிப் பேரணி


திருச்சி, பிப்.4-திருச்சியில் நடைபெற்ற இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வின் 12வது மாநில மாநாட்டுப் பேரணி- பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணிதிரண்டனர். இதனால் திங்களன்று மலைக்கோட்டை மாநகரம் செங்கடலாகக் காட்சியளித்தது.சிஐடியு மாநில மாநாட்டையொட்டி கடந்த ஒரு மாதகாலமாகவே திருச்சி மாநகரம் விழாக்கோலம் பூண்டது. நகரில் திரும்பிய திசையெல்லாம் விளம்பரத் தட்டிகளும், சுவர் விளம்பரங்களும், செங்கொடித் தோரணங்களுமாக மாநகரமே செம்மயமாகக் காட்சியளித்தது.மாநாட்டின் நிறைவு நாளான திங்களன்று நடைபெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் பேரணி, திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகிலிருந்து துவங்கியது. பேரணியை சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு துவக்கி வைத்தார். தலைவர்களும், செந்தொண்டர்களும் அணிவகுக்க, கலைநிகழ்ச்சி, மேளதாளத்துடன் துவங்கிய பல்லாயிரக்கணக்கில் திரண்ட தொழிலாளர்களின் பேரணி விண்ணதிரும் கோரிக்கை முழக்கங்களுடன் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது.
திருச்சி உழவர் சந்தையில் தோழர் உ.ரா.வரதராசன் நினைவுத் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஆர்.சிங்காரவேலு தலைமை வகித்தார். பொதுக்கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி, மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா வரவேற்க, வரவேற்புக்குழுத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் கரிசல் கிருஷ்ணசாமி, நெல்லை திருவுடையான், புதுவை சப்தர்ஹஸ்மி கலைக்குழு, தஞ்சை என்.வி கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிஐடியு புதிய நிர்வாகிகள் தேர்வு!