Tuesday 21 May 2013

சி.ஐ.டி.யூ., மாநாடு

காரைக்குடி:தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சி.ஐ.டி.யு., மாநில மாநாடு காரைக்குடியில் நடந்தது. தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., திவாகரன், பொது செயலாளர் அன்பழகன் பொருளாளர் தயானந்தம், சி.ஐ.டி.யு., மாநில பொது செயலாளர் சுகுமாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பு பொது செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், அரியானா மாநில போக்குவரத்து செயலாளர் ராம் அசாரே உட்பட பலர் பேசினர்.மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய, சுந்தர் கமிட்டியை நியமித்துள்ளது.சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் மத்திய அரசை கண்டித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது, என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.காரைக்குடி மண்டல பொது செயலாளர் எல்.சிவக்குமார் நன்றி கூறினார்.

Monday 13 May 2013

தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஜி. சுகுமாறன்


தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஜி. சுகுமாறன் -------------------  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 10632 க்கும் மேற்பட்ட ஒப் பந்தத் தொழிலாளர்களை சீனியாரிட்டி அடிப் படையில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நெய்வேலி ஒப் பந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. பெரும் நம்பிக்கையுடன் உள் ளனர். இந்நிலையில் தீர்ப்பின் அம்சங்க ளையும், கடந்த கால போராட்டங்களையும் நினைவு கூருவது அவசியம்.1989-ல் என்.எல்.சி. நிறுவனத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த ஐந்து சங்கங் களும் தொழிலாளர்களுக்கு துரோக ஒப்பந் தத்தை போட முயற்சித்தனர். அன்றைய தினம் சிஐடியு, எச்.எம்.எஸ் இரண்டு சங் கங்கள் எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

புற்றுநோய் போல பரவும் ஒப்பந்த முறையை ஒழித்திடுக!

தீக்கதிர் கட்டுரை 
கட்டுரை :-

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் அ.சவுந்தரராசன் 


                                            சென்னை, மே 8-தொழிற்சாலைகளில் புற்றுநோய் போல் பரவும் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்க அங் கீகாரத்திற்கு மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் அ.சவுந்தரராசன் கேட்டுக்கொண்டார்.புதனன்று ( மே 8) சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப் புத்துறை மானியக்கோரிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் அவர்பேசியது வருமாறு:தொழிற்சங்க அங்கீகார உரிமைகளை தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரி மையை தொழிலாளர் நலவாரியம் காப் பாற்ற வேண்டும். தொழிற்சங்கத்தையே அனு மதிக்கமாட்டோம் என்பதுதான் நிறுவனங் களின் கொள்கையாக இருக்கிறது. தொழி லாளர் நலத்துறை,

இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தமிழ் நாடு மாநில 14 வது மாநாடு நாகர்கோவி லில்


நாகர் கோவில், மே 12-

இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தமிழ் நாடு மாநில 14 வது மாநாடு நாகர்கோவி லில் ஞாயிறன்று மாலை பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் நிறைவு பெற் றது. தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வாலிபர் சங்கத் தின் மாநில மாநாடு மே 9 முதல் நாகர் கோவிலில் நடைபெற்று வந்தது. மாநி லம் முழுவதுமிருந்து வாலிபர் சங்கத் தின் 10 லட்சம் உறுப்பினர்களின் பிரதி நிதிகளாக 70 பெண்கள் உட்பட 546 பேர் பங்கேற்ற மாநாடு தமிழக இளை ஞர்களின் நலன் குறித்தும், வேலையின் மையின் தீவிரம் குறித்தும் அதற்குத் தீர்வுகாணும் வழிகள் குறித்தும் விவா தித்தது.