Monday 20 January 2014

அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் ! ( வினவு )

மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன.


ந்தியாவின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த 15 மாதங்களில் ரூ 2.1 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை புதுப்பிக்க உள்ளன. அதாவது, அடுத்த 15 மாதங்களில் இந்நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடன்களின் காலக் கெடு முடிவுக்கு வருகின்றது, அந்தக் கடன்களுக்கு மாற்றாக புதிய கடன்களை வங்கிகள் கொடுக்கப் போகின்றன. காலாவதியாகப் போகின்ற இந்த கடன்களின் மதிப்பு 2013-ம் ஆண்டின் இறுதியில் இந்திய வங்கிகளின் நிகர மதிப்பில் 29 சதவீதம் ஆகும். இந்தத் தகவல்கள் ஃபிட்ச் குழுமத்தைச் சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

Thursday 2 January 2014

ஓய்வூதிய பாதுகாப்புக்கு வேட்டு


காங்கிரஸ் - பாஜக கைகோர்ப்பு


ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா (ஞகுசுனுஹ க்ஷடைட) செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும் 6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.
இந்த சட்டம் பாஜகவினால் 1.1.2004 முதல் அமல்படுத்தப்பட்ட சட்ட விரோதமான புதிய பென்சன் திட்டத்தை அந்த தேதியிலிருந்தே சட்டப்படியானதாக்குகிறது. சட்ட விரோத ஆணையத்தை சட்டப்படையானதாக்குகிறது என்று ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறினார்.இந்த சட்டப்படி புதிய பென்சன் திட்டத்தில் வருபவர்களுக்கு ஓய்வூதியம் பங்குச் சந்தையின் லாப நஷ்டத்தை பொருத்தது. லாபத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று சட்டமே கூறுகிறது. குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதமும் இல்லை. குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. அதுமட்டுமல்ல 1972 பணிக்கொடை சட்டத்தின்படி கூட பணிக்கொடை கிடையாது.

ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு : மின் ஊழியர் மத்திய அமைப்பு வருத்தம்

சென்னை, ஜன. 1 -
மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த முதல்வரின் அறிவிப்பு வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது என்று மின் ஊழியர் மத்திய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

                                  இதுதொடர்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2011 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் புத னன்று (ஜன.1) வெளியிட்டுள்ளார். அதன்முழு விவரங்களையும் பரிசீலித்த பின்னரே சாதக, பாதக அம்சங்கள் குறித்து கூற முடியும்.இருப்பினும், ஊதிய உயர்வு சம்பந்த மான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 14.11.2013 அன்று வாரிய தரப்பின் ஆலோசனை முன் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட தொழிற் சங்கங்கள் வாரியத்தின் ஆலோசனை மீது கருத்துக்களை கூறின. இதன் மீது வாரியம் மற்றும் அரசின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோதே, தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கையை இறுதிப்படுத்தி அரசு அறிவிப்பதற்கு முன்னர், முதலமைச்சரோ, மின் துறை அமைச்சரோ தொழிற் சங்கங்களுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இதை அறிவித்திருக்க வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு கருதுகிறது.2005-ல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை யின்போது இன்றைய முதலமைச்சர் தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அறிவிப்பு வெளி யிட்ட மரபைக் கூட இம்முறை கடைப் பிடிக்கவில்லை என்பது மன வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி தீக்கதிர்